சினிமா செய்திகள்

அவெஞ்சர்ஸ் எண்ட்கேமின் கடைசி முயற்சியும் வீண்!

Published

on

2009ம் ஆண்டு வெளியான அவதார் படம் தான் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் கடந்த பத்து ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. இந்த படத்தின் வசூலை முறியடிக்க, எவ்வளவோ முயற்சியை மார்வெல் எடுத்து வந்தது. ஆனால், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தால் கூட அவதார் வசூலை முறியடிக்க முடியவில்லை.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் படம் உலகளவில் வசூலில் முதலிடத்தில் இருந்தது. அந்த படத்தின் வசூலை அவர், இயக்கிய மற்றொரு படமான அவதார் படம் தான் 2009ல் முறியடித்தது. அவதார் படம் 2.878 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்து முதலிடத்தை பிடித்தது. டைட்டானிக் படம் 2வது இடத்தில் இருந்தது.

கடந்த ஏப்ரலில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் ஏகப்பட்ட சூப்பர் ஹீரோக்கள் இருந்தனர். படத்தின் கதையும் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டு, வெளியானது.

உலகளவில் படம் அமோகமாக ஓடியது. முதல் முறையாக டைட்டானிக் பட வசூல் சாதனையை ஜேம்ஸ் கேமரூன் அல்லாத ஒரு இயக்குநரின் படம் முறியடித்து பின்னுக்குத் தள்ளியது. இதுகுறித்து தனது ஸ்டைலிலேயே ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் டீமுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

ஆனால், அவதார் படத்தின் வசூலை முறியடிக்க முடியாமல் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் எண்ட் ஆனது.

ஆனாலும், மார்வெல் எப்படியாவது அவதார் வசூலை முறியடிக்க வேண்டும் என்ற முயற்சியில், படத்தில் சில வெட்டப்பட்ட காட்சிகளை சேர்த்து ரீ ரிலிஸ் செய்தது.

ஆனால், அது வெறும் 8.7 மில்லியன் டாலரை மட்டுமே வசூலை செய்ததால், கடைசி முயற்சியும் வீணானது. 2.788 பில்லியன் டாலர்கள் வசூலுடன் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் 2ம் இடத்தில் உள்ளது.

அவதார் 2 படம் வந்தால் தான் அவதார் படத்தின் வசூலை முறியடிக்க முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version