விளையாட்டு

கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு விழா எடுக்கத் தயாரான சொந்த ஊர்… தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!

Published

on

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக தற்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறார் நடராஜன்.

வலைப்பந்து வீரராக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியக் கிரிக்கெட் அணியுடன் முதலில் இணைந்தார் நடராஜன. தனது முதல் சுற்றுப்பயணத்திலேயே ஒரே பயணத்தில் அத்தனைப் போட்டிகளிலும் சர்வதேச அறிமுகத்தைக் கொடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் நடராஜன்.

தமிழகத்தைச் சேர்ந்த சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தைத் தனது சொந்த ஊராகக் கொண்டவர் நடராஜன். சாதாரண நெசவாளி தந்தைக்கும் சாலை ஓர உணவகம் நடத்தும் தாய்க்கும் மூத்த மகனாகப் பிறந்தவர். தனக்குக் கீழ் நான்கு சகோதர, சகோதரிகளைக் கொண்டவர். நடராஜனுக்கு கடந்த நவம்பர் மாதம் தான் பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே சுற்றுப்பயணத்தில் இந்தியாவை மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட் உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் நடராஜன். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து சொந்த ஊர் திரும்புவதாக இருந்த நடராஜனுக்கு அவரது சொந்த ஊர் மக்கள் பாராட்டு விழா நடத்துவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினர்.

ஆனால். கொரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி தமிழக அரசு அதிகாரிகள் நடராஜனுக்கு நடக்கவிருந்த பாராட்டு விழாவைத் தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும், அவரது வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த விழா தளங்கள், மேடைகள், அலங்காரங்கள் என அத்தனையும் அகற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version