உலகம்

ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாக பிரிகிறதா? புதிய கடல் உருவாகிறதா? ஆய்வாளர்களின் அதிர்ச்சி அறிக்கை..!

Published

on

ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாகப் பிரிய வாய்ப்பு இருப்பதாகவும் புதிய பெருங்கடல் ஒன்று தோன்ற வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வாளர்களின் தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிரிக்கா கண்டம் இரண்டு அல்லது அதற்கு மேலாக பிரியும் என்றும் ஒரு புதிய கடல் உருவாகும் என்றும் சமீபத்தில் ஜியோ பிஸிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை கூறியுள்ளது. இந்த தகவல் ஆப்ரிக்க கண்டத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆய்வின் படி ஆப்பிரிக்கா கண்டத்தில் கடந்த 205 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் பெறும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக எத்தியோப்பிய பாலைவனத்தில் 35 மைல் நீளமான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விரிசல் மேலும் அதிகரித்து புதிய கடல் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

நில அதிர்வு மற்றும் கடலின் அடிப்பகுதியில் நடக்கும் செயல்முறை காரணமாக கண்டத்தில் பிளவு உருவாக வாய்ப்பு இருப்பதாகவும்ஆப்பிரிக்க நுபியன், ஆப்பிரிக்க சோமாலி மற்றும் அரேபியன் ஆகிய மூன்று டெக்டோனிக் தகடுகளின் எல்லைகளில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கு 3000 கிலோமீட்டர் மேல் பரவி வடக்கே ஏடன் வளைகுடாவிலிருந்து தெற்கில் ஜிம்பாவே வரை அமைந்துள்ளது என்றும் இது ஆப்பிரிக்க தட்டுகளை இரண்டாக பிரிக்கும் என்றும் சோமாலியா மற்றும் நுபியன் ஆகிய தட்டுகள் பிரிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து இந்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்த கிறிஸ்தவபர் என்பவர் தனது அறிக்கையில் தெரிவித்த போது இந்த புவியியல் செயல்முறைகளை தவிர்க்க முடியாது என்றும் கண்டத்தை பிரிக்கும் இந்த இயற்கை பேரழிவு நிச்சயம் நடந்தே தீரும் என்றும் இதன் விளைவால் உகாண்டா போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் புதிய கடற்கரையை பெறா வாய்ப்புகள் கூறப்படுகிறது.

ஆனால் இந்த நிகழ்வு ஏற்படுவதற்கு சுமார் ஐந்து முதல் பத்து மில்லியன் ஆண்டு வரை ஆகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டம் பிளவுபடுவது மற்றும் புதிய கடல் தோன்றுவதன் காரணமாக மக்கள் ஒரு சில நாட்டை விட்டு வெளியேறுவது நடக்கும் என்றும் இயற்கை பேரழிவின் காரணமாக உயிர் இழப்புகளும் இருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் புதிய கடற்கரையின் வருகை காரணமாக சில நாடுகள் பொருளாதாரத்தில் மேம்படும் என்றும் புதிய துறைமுக வாய்ப்புகளை சில நாடுகள் பெறலாம் என்றும் இதன் காரணமாக வர்த்தக துறைமுகங்கள், மீன்பிடித்தளங்கள் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள விலைமதிப்பு பொருட்கள் காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் பயன் அடைவார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்கா இரண்டு கண்டமாக பிரிவதற்கு மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும் என்றும் புதிய கடல் உருவாக குறைந்தது 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்றும் உகாண்டா உள்ளிட்ட ஒரு சில நாடுகள் தங்கள் சொந்த கடற்கரையை பெற முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிளவு ஏற்படுத்திய பின்னர் உருவாகும் சிறிய கண்டத்தில் இன்றைய சோமாலியா உள்பட சில நாடுகளும் கென்யா, எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய நாடுகளும் அடங்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version