சினிமா

4-ம் தலைமுறையாகத் திரைவுலகில் ஜேசுதாஸ் குடும்பத்தினர் பாடலை படிவருகிறார்கள்!

Published

on

பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் , மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி, அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் உட்படப் பல மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார். யேசுதாசின் தந்தை அகஸ்டின் ஜோசப்பும் ஒரு பாடகர். இவர் தமிழில் வெளியான ‘நல்ல தங்காள்’ படத்தில் 1950ல் பாடியுள்ளார்.

நீண்ட இசைக்குடும்பமான ஜே.ஜே.ஜேசுதாஸ் மகனை அடுத்து அவருடைய பேத்தியும் தற்போது பாடகியாகியுள்ளார். அவருக்கு மலையாள திரையுலகினர் வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.

யேசுதாஸ்சின் தந்தை அகஸ்டின் ஜோசப் என்பவர் மலையாள திரையுலகில் ஒரு பிரபலமான பாடகர், அவரை அடுத்து யேசுதாஸ்சும், அவரது மகன் விஜய்ஜேசுதாசும் புகழ்பெற்ற பாடகர்களாக இருக்கும் நிலையில் தற்போது யேசுதாஸ்சின் பேத்தியும் விஜய்ஜேசுதாஸ்சின் மகளுமான அமேயா என்ற சிறுமியும் பாடகியாக மாறியுள்ளார்.

ஜேசுதாசையும், விஜய் ஜேசுதாசையும் சினிமாவில் பாடகர்களாக அறிமுகப்படுத்திய பழம்பெரும் இசை அமைப்பாளர் வி.தட்சிணாமுர்த்தியே ‘சியாமராகம்’ என்ற படத்தில் பேத்தி அமேயாவை பாட வைத்துள்ளார். அமேயா பாடிய படம் தற்போது வெளிவர இருக்கிறது.மேலும் இந்தப் படத்தில் தாத்தா ஜேசுதாஸ், அப்பா விஜய் ஜேசுதாஸுடன் மகள் அமேதாவும் பாடியுள்ளார்.

மலையாள திரைப்படமான ‘சியாமராகம்’ என்ற படத்தில் யேசுதாஸ் சின் பேத்தி அமயா என்பவர் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலில் யேசுதாஸ் மற்றும் விஜய்ஜேசுதாஸ் ஆகியோர்களும் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு தலைமுறைகளாக இசைத்துறையில் சேவை செய்து வரும் ஜேசுதாஸ் குடும்பத்திற்குச் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version