தமிழ்நாடு

கும்பகோணம் தனியார் பள்ளியில் மேலும் 4 பேருக்கு கொரோனா!

Published

on

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவது அம்மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தனியார் பள்ளியில் மேலும் 4 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கும்பகோணம் தனியார் பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த மூன்று ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 225 ஆக இருந்தது என்பதும் அதில் 120 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்பதும் 105 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அம்மாவட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது/ தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைவரும் மாஸ்க் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version