தமிழ்நாடு

தமிழரின் பெருமை உலகறிவதால் சிலருக்கு வயிற்றெரிச்சல்: குருமூர்த்தியை ‘புண்படுத்திய’ தங்கம் தென்னரசு

Published

on

பாஜக ஆதரவாளரான குருமூர்த்தி நடத்தி வரும் ‘துக்ளக்’ இதழில், தமிழகத்தில் நடந்து வரும், குறிப்பாக கீழடியில் நடந்து வரும் அகழ்வாய்களை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ‘தொல்பொருள் ஆய்வு என்ற வெட்டிவேலை’ என்று அக்கட்டுரைக்குத் தலைப்பு வைக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டுளதற்கு திமுக அரசு தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தமிழரின் பாரம்பரியம் மற்றும் பண்பாடு குறித்து தொடர்ந்து சான்றுகள் கிடைத்து வருகின்றன. இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள சிலருக்கு மனம் வருவதில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழனின் பெருமை உலகெல்லாம் அறிவதால் சிலருக்கு வயிறு எரிகிறது. அவர்களுக்குத் தொடர்ந்து வயிறு எரியட்டும்.

நீங்கள் நன்றாக வயிறு எரிவதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் தொடர்ந்து இந்த அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து செயல்படுத்துவோம். உலகமெல்லாம் தமிழனின் பெருமையை நிலைநாட்டுவோம்.

வேலையற்ற சிலர் தேவையற்ற சில கருத்துகளை சொல்வதால் இப்படியான ஆய்வுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்களுக்கு நன்றாக வயிறு எரியட்டும். பேரறிஞர் அண்ணா சொன்னது போல தமிழ்ப் பண்பாட்டுத் தீ அகிலமெல்லாம் பரவட்டும். நம் பண்பாட்டு உணர்வு பொங்கட்டும்’ என்று அதிரடியாக பேசியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version