தமிழ்நாடு

செந்தில் பாலாஜியுடன் தங்க தமிழ்ச்செல்வன் நெருக்கம்: உரசிப் பார்க்கும் திமுக!

Published

on

அமமுக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வம். தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர் தற்போது அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தங்க தமிழ்ச்செல்வன் விரைவில் திமுகவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் உலா வந்தது.

முன்னதாக அமமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விலகி திமுகவில் இணைந்தார். இது அரசியல் வட்டாரத்தில் தினகரனுக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில் தற்போது செந்தில் பாலாஜி மூலம் திமுக அதிருப்தியில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் இதுகுறித்து தனது விளக்கத்தை அளித்துள்ளார். அதில், என் குடும்பமே அதிமுகதான். இப்போது நேரம் சரியில்லாமல் அதிமுகவை கைப்பற்றுவதற்காக அமமுகவை நடத்திக் கொண்டிருக்கிறோம். திமுகவுக்கு நான் செல்கிறேன் என்பது தவறான செய்தி என்றார்.

மேலும், செந்தில்பாலாஜி நல்ல நண்பர்தான் என்றும் கூறியிருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். இந்த விளக்கத்தில் அவர், நான் திமுகவுக்கு செல்ல மாட்டேன் என்றோ செந்தில் பாலாஜியோ, திமுகவோ தன்னை இழுக்க முயற்சிக்கவில்லை என்றோ மறுப்பு தெரிவிக்கவில்லை.

Trending

Exit mobile version