தமிழ்நாடு

ஒபிஎஸ் மகன் பணம் கொடுத்தால் வாங்கிட்டு எனக்கு ஓட்டு போடுங்க: தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி!

Published

on

இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் முக்கியமான தொகுதியாக மாறி உள்ளது தேனி மக்களவை தொகுதி. இதில் அதிமுகவின் சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும், அமமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் போட்டியிடுகின்றனர்.

இதில் அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் பெரியகுளம் பாரளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பாரளுமன்ற உறுப்பினராக இருந்துபோது தொகுதியிலே தங்கி இருந்து மக்கள் குறைகளை தீர்த்தவர்.

10 ஆண்டுகளுக்கு முன்பு நான், டிடிவி தினகரன், ஒபிஎஸ் மூவரும் ஒரே வாகனத்தில் வந்த நிலையில், டிடிவி தினகரனால் மக்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக அறிமுகம் செய்யப்பட்ட ஒபிஎஸ் முதலமைச்சர் வரை உயர்ந்துள்ளார். முதல்வர் அளவுக்கு உயர்த்திய குடும்பத்தையே ஒபிஎஸ் குடும்பம் எதிர்கின்றது. ஒபிஎஸ் தனது மகன் தேர்தல் செலவுக்கு 1000 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு எனக்கு வாக்களியுங்கள் என்றார் அதிரடியாக.

தேர்தலில் பணம் கொடுப்பதும் தவறு பணம் பெறுவதும் தவறு. ஆனால் பணம் கொடுப்பதை வாங்குங்கள் என அதனை ஊக்குவிக்கும் விதமாக தங்க தமிழ்ச்செல்வம் பேசி இருப்பது தேர்தல் விதிமீறல் என பேசப்படுகிறது.

Trending

Exit mobile version