தமிழ்நாடு

வேலூரில் தினகரன் கட்சிக்கு ஆயிரம் ஓட்டுகள் கூட கிடைக்காது: தங்க தமிழ்செல்வன் பொளேர்!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் 22 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலிலும் போட்டியிட்ட டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவை அனைத்தையும் சுக்குநூறாக உடைத்துவிட்டது தேர்தல் முடிவுகள்.

போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்து கடும் விமர்சனங்களை சம்பாதித்தது அமமுக. இந்நிலையில் தற்போது வேலூர் மக்களவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாகிவிட்டன. இந்த தேர்தலில் அமமுக போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். கட்சியை பதிவு செய்யும் பணிகளில் ஈடுபட்டு இருப்பதால் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அமமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமமுகவின் இந்த முடிவை விமர்சித்துள்ளார் அமமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்துள்ள தங்க தமிழ்செல்வன். தினகரன் இன்னும் பெரிய தலைவனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறார். அது நிச்சயமாக இல்லை. அதிமுகவுக்கு ஒரு மாற்றாக நூறு சதவீதம் தினகரன் இல்லை.

அவரது கட்சிக்கு எதிர்காலம் இருக்கிறது என்றால் வேலூர் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை. போட்டியிட்டால் ஆயிரம் ஓட்டுக்கள்தான் கிடைக்கும். இன்னும் மோசமான நிலைக்குத்தான் அந்த கட்சி போகும். கேட்டால் கட்சியை பதிவு செய்யவில்லை. பதிவு செய்ய பின்னர் நிற்கலாம் என்கிறார்கள். 22 தொகுதி இடைத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் கட்சியை பதிவு செய்யாமல்தானே தேர்தலை சந்தித்தீர்கள் என தெரிவித்துள்ளார் தங்க தமிழ்செல்வன்.

seithichurul

Trending

Exit mobile version