தமிழ்நாடு

ஆளுநர் பதவிக்கு அடித்தளம் போடுகிறாரா ஓபிஎஸ்? தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவல்!

Published

on

துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் காசி சென்று பாஜக பேரணியில் கலந்துகொண்டது தமிழக அரசியல் அரங்கில் பெரும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

இதனையடுத்து அவர் பாஜகவில் சேர உள்ளதாக அமமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூற அது செய்தியாளர்களுக்கு தீணியாக அமைந்தது. இந்த கேள்வியை செய்தியாளர்கள் ஓபிஎஸ் இடம் நேரடியாக கேட்க பொதுவாக அமைதியாக பேசும் ஓபிஎஸ் ஆவேசமடைந்த காட்சிகளும் நடந்தன. இதனையடுத்து ஓபிஎஸ் தான் இறக்கும் போது அதிமுக கொடியைத்தான் போர்த்த வேண்டும் என பதில் அறிக்கை வெளியிடும் அளவுக்கு சென்றது.

இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தை சீண்டும் விதமாக பரபரப்பு தகவல் ஒன்றை கூறியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், ஓபிஎஸ் குடும்பம் காவி வேட்டியை கட்டிக்கொண்டு மோடி சாமியை கும்பிடத்தான் வாரணாசிக்கு சென்றுள்ளனர். அவர்களால் வடமாநிலங்களில் தமிழகத்தின் மானம் காற்றில் பறக்கிறது.

ஆளுநர் பதவியை பெற்றுக்கொண்டு தனது அரசியல் வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என எண்ணுகிறார் ஓ.பன்னீர்செல்வம். அவரது மகன் வெற்றிபெற மாட்டார். பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர் ஓ.பன்னீர்செல்வம். பாஜகவின் உத்தரவுகளின்படியே பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் செயல்படுகின்றனர் என தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version