தமிழ்நாடு

திமுகவில் சேருவது வதந்தி: கடந்த டிசம்பரில் தங்க தமிழ்செல்வன் செய்த டுவிட்!

Published

on

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அவர் அக்கட்சியில் இருந்து விலகி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த டிசம்பர் மாதம் பதிவிட்டு டுவிட் ஒன்று வைரலாகி வருகிறது.

தங்க தமிழ்செல்வன் அதிமுகவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், மு.க.ஸ்டாலின் ஆளுமைமிக்க தலைவர் என்பதால் திமுகவில் இணைந்தேன். ஒற்றைத் தலைமை இருப்பதால் திமுக தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. எனது உழைப்பை கண்டு ஸ்டாலின் திமுகவில் பதவி வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.

அமமுகவில் இருந்து வந்தவர்களுக்கு நல்லது செய்தவர் மு.க.ஸ்டாலின். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்ற அண்ணாவின் கொள்கைப்படி இருப்பவர் மு.க.ஸ்டாலின். அதிமுகவை பாஜக இயக்குவதால் தன்மானத்தை இழந்து அதிமுகவில் இணையவில்லை. அமமுக நிர்வாகிகள் பலர் திமுகவுக்கு வருவார்கள். தேனியில் மாநாடு நடத்தப்படும் என தெரிவித்தார் தங்க தமிழ்செல்வன்.

இந்நிலையில் கடந்த 2018 டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி செய்த டுவிட் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், நான் திமுகவில் சேர விருப்பமாக திமுக ஐடி விங் வதந்தியை பரப்பி வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம். நான் என்றும் தியாக தலைவி சின்னம்மா ஆணைக்கிணங்க மக்கள் செல்வர் டிடிவி தினகரன் வழியில் என் பயணம் தொடரும். துரோகத்தை வீழ்த்தி எதிரியை வென்று கழகத்தையும் தமிழகத்தையும் மீட்போம் என்பது உறுதி என பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version