தமிழ்நாடு

தங்க தமிழ்செல்வன் ஒருநாள் ஹீரோ, நாளைக்கே அவர் ஜீரோ: ஜெயக்குமார் எதுகை மோனை!

Published

on

அமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக திமுகவில் இணைந்தார். இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் தங்க தமிழ்செல்வனை ஜீரோ என விமர்சித்துள்ளார்.

முன்னதாக தங்க தமிழ்செல்வனுக்கும் தினகரனுக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவுக்கு வந்தால் வரவேற்போம் என்றார். இந்நிலையில் திடீர் திருப்பமாக திமுகவுக்கு சென்ற தங்க தமிழ்செல்வன், அதிமுகவை பாஜக இயக்கிவருவதாகவும் தன்மானத்தை இழந்து நான் அதிமுகவில் சேரவிரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், எந்தக் கட்சியில் இணைவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைந்திருந்தால் எப்போதும் ஹீரோவாக இருந்திருப்பார். இப்போது ஒரு நாள் ஹீரோதான். நாளைக்கே அவர் ஜீரோ தான் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version