தமிழ்நாடு

தினகரனை வசைபாடிய தங்க தமிழ்ச்செல்வன் ஆடியோ குறித்து அதிரடி விளக்கம்!

Published

on

அமமுக முக்கிய தலைவராகவும், அந்த கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் இருக்கும் தங்க தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் தினகரனை வசைபாடும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

தினகரனின் உதவியாளர் ஜனாவிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய போன் உரையாடலில், உங்க அண்ணன் எங்கப்பா என கேட்கிறார் தங்கதமிழ்ச்செல்வன். அதற்கு அவர், அண்ணன் நான் ஊரில இல்லை என்கிறார். உடனே கோபப்படும் தங்கதமிழ்ச்செல்வன், இந்த மாதிரி பொட்டத்தனமான அரசியல் பண்ணறதை நிறுத்தச் சொல்லுப்பா உங்க அண்ணணை.

நான் விஸ்வரூபம் எடுத்தால், நீங்க அழிஞ்சு போவீங்க. நான் நல்லவன். நேற்று தேனில கூட்டம் போட்டேன். நாளைக்கு நான் மதுரைல கூட்டம் போடவா? பாரு. என்ன நடக்குதுனு பாரு. இந்த பேடித்தனமான அரசியல பண்ண வேணாம்னு உங்க அண்ணன்ட சொல்லிடு. தோத்துப்போவ, என்னைக்கும் ஜெயிக்க மாட்ட என கோபம் கொப்பளிக்க பேசுகிறார் தங்க தமிழ்ச்செல்வன்.

தங்க தமிழ்ச்செல்வனின் இந்த சர்ச்சைக்குறிய ஆடியோ அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆடியோ குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். அதில், கட்சியில் சிலவற்றை தலைமை மாற்றவேண்டும். நிர்வாகம் சரியில்லை. நெல்லையிலும், கோயம்புத்தூரிலும் மண்டல பொறுப்பாளர்களால் கட்சி அழிந்துவிட்டது. இதையெல்லாம் சரி செய்யுங்கள் என்றேன்.

அதற்கு என்னை கூப்பிட்டு கண்டிக்காமல் சிலர் மூலம் சமூகவலைதளங்களில் என்னை பற்றி தவறாக செய்தி போடும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் தவறு செய்திருந்தால் என்னை கட்சியை விட்டு நீக்க வேண்டியது தானே. ஏன் இந்த மாதிரி சின்னத்தனமான செயல்பாட்டை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னை பிடிக்காவிட்டால் கட்சியை விட்டு நீக்குங்கள்.

நான் நேர்மையானவன் ஒரு தகவலை சொல்கிறேன் அது பிடிக்கவில்லை என்றால் என்னை கட்சியை விட்டு நீக்கி விடுங்கள். சிலரை கூட்டமாக வைத்துக் கொண்டு வலைதளங்களில் என்னை பற்றி தவறான செய்தியைப் போடுவது எனக்கு வருத்தமாக உள்ளது. இதுக்கு மேல் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் தங்க தமிழ்ச்செல்வன்.

seithichurul

Trending

Exit mobile version