தமிழ்நாடு

சமூக நீதிக்காக பாடுபட்ட தந்தை பெரியார் பிறந்த நாள்!

Published

on

சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் 143வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தந்தை பெரியாரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பெரியார் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது சமூகநீதியை சமன்படுத்தியவர் என்பதுதான். ஈரோட்டில் வெங்கட நாயக்கர் மற்றும் சின்ன தாயம்மை ஆகியோருக்கு மகனாக 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பத்தினர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் என்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெரியார் சிறப்பாக பேசுவார்.

சமூக சீர்திருத்தம், சாதி வேற்றுமை ஆகியவற்றுக்காக பாடுபட்டவர்களில் ஒருவர் பெரியார். மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைய வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர், சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவுவாதம் ஆகியவற்றில் புகழ்பெற்று விளங்கினார்.

மூடநம்பிக்கைக்கு காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை பெயரால் உருவான சமயங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இவர் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். சாதி வேறுபாடுகளை களைவதற்காக இவரது பணி சிறப்பு வாய்ந்தது. இவருடைய பகுத்தறிவு கொள்கைகள், சுயமரியாதைக் கொள்கைகள் தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டது.

பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி, புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா, வைகோ ஆகியோர் பெரியாரின் கொள்கைகளை பின்பற்றியவர்களில் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை பெரியாரின் அவர்களின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. தந்தை பெரியாரின் இன்றைய பிறந்த நாளில் அவரது கொள்கைகளை கடைபிடித்து நடப்போம் என அனைவரும் சூளுரைப்போம்.

seithichurul

Trending

Exit mobile version