தமிழ்நாடு

தாமிரபரணி மகா புஷ்கர விழா: புனித நீராடினர் ஓ.பி.எஸ்.!

Published

on

தாமிரபரணி: தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11 ஆம் தேதி கொலைக்களத்துடன் துவங்கியது. இந்த விழா நாளை வரை நடைபெறுகிறது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் உள்ள தீர்த்தகட்டங்கள், படித்துறைகளில் பகல் நேரத்தில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலை நேரத்தில் தாமிரபரணிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

இந்த விழாவில் 1000 கணக்கான தமிழக பக்தர்கள் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர்.

தமிழ்நாட்டின் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று காலை நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ராஜேசுவரி மண்டப படித்துறைக்கு வந்தடைந்தார். அங்கு அவர் மலர்களைத் தூவி தாமிரபரணிக்குப் பூஜை செய்து, தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார். அதனைத் தொடர்ந்து அவர் பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலில் சாமி தரிசனத்தை  முடித்துவிட்டுப் புறப்பட்டார்.

Trending

Exit mobile version