இந்தியா

காங்கிரஸ் கூட்டணியை அதிமுக விரும்புகிறதா: தம்பிதுரையின் நோக்கம் என்ன?

Published

on

அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சமீப காலமாக பாஜக மற்றும் மோடிக்கு எதிராக பேசி வருகிறார். மேலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்கிற ரீதியிலும் பேசி வருகிறார். இதற்கு பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் அதை சொல்ல தம்பிதுரைக்கு அதிகாரம் இல்லை எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.

ரஃபேல் விவகாரம், 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா போன்றவற்றில் பாஜகவுக்கு எதிராக மக்களவையில் பேசி கவனத்தை ஈர்த்த தம்பிதுரை திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த போது நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை. ஆட்சியுடன்தான் தொடர்பில் இருக்கிறோம். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ஒரு நட்பு உள்ளது. பிரதமர் மோடி எனக்கு நண்பர்தான் என்றாலும் அரசியல் என்பது வேறு என்றார்.

தொடர்ந்து பேசிய தம்பிதுரை, வாக்கு வங்கிக்காகவே பாஜக அரசு 10 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தது. அதிமுகவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆதரவளித்தால் வரவேற்போம். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளை காங்கிரஸ் கவனத்தில் கொண்டால் அதிமுக அதை வரவேற்கும் என்றார்.

பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் தம்பிதுரை அதிமுகவுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆதரவளித்தால் வரவேற்போம் என கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க அதிமுக விரும்புகிறதா என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version