தமிழ்நாடு

பாஜகவை சுமந்து செல்ல அதிமுகவினர் பாவம் செய்திருக்கிறார்களா? விளாசிய தம்பிதுரை!

Published

on

கடந்த சில வாரங்களாகவே பாஜகவுக்கு எதிராக பேசி வரும் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அதனை தொடர்ந்து வருகிறார். அதிமுக, பாஜக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தம்பிதுரை தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூற தம்பிதுரைக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் எம்ஜிஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தம்பிதுரை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தம்பிதுரை, பாஜக தமிழகத்தில் காலுன்ற அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென ஆடிட்டர் குருமூர்த்தி கூறியிருப்பது கேலியாக உள்ளது. குருமூர்த்தி விளம்பரத்திற்காகப் பேசுகிறார். அதிமுகவை மேலும் வளர்க்க நாங்கள் பாடுபடுகிறோம், பாஜகவை அவர்கள் வளர்க்கட்டும் என்றார்.

மேலும், பாஜகவைச் சுமந்து செல்ல அதிமுகவினர் பாவம் செய்திருக்கிறார்களா? பாஜகவைக் காலுன்ற வைக்க அதிமுகவினர் சுமந்து செல்ல மாட்டோம். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப அதிமுக செயற்குழு கூடி முடிவெடுக்கும். அதை ஒருங்கிணைப்பாளர்துணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்துவார்கள் என்றார் தம்பிதுரை.

author avatar
seithichurul

Trending

Exit mobile version