தமிழ்நாடு

அதிமுகவுக்குள் பாஜக மூக்கை நுழைக்க வேண்டாம்: எச்சரிக்கும் தம்பிதுரை!

Published

on

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார். குறிப்பாக அதிமுக, பாஜக கூட்டணியை தம்பிதுரை விரும்பவில்லை. எனவே தம்பிதுரை தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிராக பேசி வருகிறார். இவரது இந்த கருத்துக்கள் தமிழக பாஜக தலைவர்களுக்கு கோவத்தை ஏற்படுத்தி வருகிறது.

முன்னதாக பாஜகவை தூக்கி சுமக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என தம்பிதுரை தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்களுக்கு பாஜக தலைவர்களும் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். அதிமுகவில் கருத்து சொல்லும் அதிகாரத்தை தம்பிதுரைக்கு யார் கொடுத்தது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்த நிலையில் தற்போது பாஜக தமிழக தலைவர் தமிழிசையும், கூட்டணி தொடர்பாக தம்பிதுரை கூறுவது அதிமுகவின் கருத்தல்ல என வரம்பு மீறி கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை தம்பிதுரை சந்தித்தபோது அவரிடம் தமிழிசையின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, அதிமுகவில் கருத்து சொல்ல யாருக்கு உரிமையுள்ளது என தமிழிசை எப்படி கூற முடியும். எங்கள் கட்சியில் அவர்கள் மூக்கை நுழைப்பது தவறு. அவர்கள் கட்சி விவகாரங்களில் நாங்கள் மூக்கை நுழைக்கை மாட்டோம். தமிழகத்திலுள்ள பாஜக தலைவர்கள் தங்கள் கட்சியை வளர்ப்பதற்காக ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் அரசை குறை சொல்லும்போது நாங்கள் வாய்மூடி மவுனியாக இருக்க வேண்டுமா என்றார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version