தமிழ்நாடு

இதனால் தான் நான் பாஜகவை விமர்சிக்கிறேன்: தம்பிதுரை விளக்கம்!

Published

on

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை மத்தியில் ஆளும் பாஜகவை சமீபகாலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தான் பாஜகவை விமர்சிப்பதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார்.

ரஃபேல் விவகாரம், பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் மசோதா என பல விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் அதிமுக எம்பி தம்பிதுரை. மேலும் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைப்பதையும் தம்பிதுரை விரும்பவில்லை.

பாஜக இதுவரை தமிழகத்துக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை என தொடர்ந்து தனது பேட்டிகளில் கூறி வருகிறார் தம்பிதுரை. மேலும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்காது எனவும் ஊடகங்களில் பேசி வருகிறார் தம்பிதுரை. இதனால் பாஜக தலைவர்களும் தம்பிதுரையை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மணப்பாறையில் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, பாஜக என்னை விமர்சனம் செய்வதாலேயே நான் பாஜவை விமர்சனம் செய்து வருகிறேன் என்றார். மேலும் தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சிகளுடன்தான் அதிமுக கூட்டணி வைக்கும் என்றார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version