தமிழ்நாடு

துணை சபாநாயகர் பதவியை தர்மம் போடவில்லை: எச்.ராஜாவுக்கு தம்பிதுரை பதிலடி!

Published

on

அதிமுக, பாஜக இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் அதிமுகவின் தம்பிதுரை தொடர்ந்து பாஜக கூட்டணிக்கு எதிராக பேசி வருகிறார். இதனால் பாஜகவினர் தொடர்ந்து தம்பிதுரையை விமர்சித்து வருகின்றனர்.

தம்பிதுரை குறித்து சமீபத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அதிமுகவில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் தம்பிதுரை இல்லை. அவர் துணை சபாநாயகராக ஏன் தொடர்கிறார் என்றும் தெரியவில்லை என விமர்சித்தார். இதற்கு தம்பிதுரை பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.

திருச்சியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, துணை சபாநாயகர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வேண்டும் என்றுதான் மல்லிகார்ஜுன் கார்கே கேட்டுக்கொண்டார், துணை சபாநாயகர் பதவியைக் கேட்கவில்லை.

காங்கிரஸுக்கு அடுத்தபடியாக அதிகமான எம்.பி.க்களைக் கொண்டதாக அதிமுக இருந்தது. ஆகவே முறைப்படி அதிமுகவுக்கு வர வேண்டிய துணை சபாநாயகர் பதவியைக் கொடுத்துள்ளனர். ஏதோ தர்மம் போட்டதுபோல பேசக்கூடாது என்றார் அதிரடியாக. மேலும் தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையும் வரவில்லை, கஜா புயலுக்கு கேட்ட நிதியும் வரவில்லை. தமிழகத்துக்கு உதவாமல் வஞ்சித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசை விமர்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

Trending

Exit mobile version