தமிழ்நாடு

கூட்டணி குறித்த கேள்வி: பாஜகவை மீண்டும் தாக்கும் தம்பிதுரை!

Published

on

வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? வைக்காதா? என்ற கேள்வி இன்றுவரை உறுதிசெய்யப்படாமல் சந்தேகத்துக்குறிய வகையிலேயே உள்ளது. இரு கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது. ஆனால் அதிமுக எம்பி தம்பிதுரை பாஜக கூட்டணிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை கூறி வருகிறார்.

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை தொடர்ந்து அதிமுக, பாஜக கூட்டணிக்கு எதிராக பேசி வருகிறார். ஒவ்வொரு பேட்டிகளிலும் பாஜகவை வறுத்தெடுத்து வரும் தம்பிதுரைக்கு பாஜகவினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரே தம்பிதுரையின் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் என்றார்.

இதனையடுத்து தம்பிதுரையின் தனது கருத்து சொந்த கருத்து கட்சியின் கருத்து இல்லை என விளக்கம் அளித்தார். இந்நிலையில் மீண்டும் தம்பிதுரை பாஜகவை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரையிடம், பாஜக, அதிமுக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோமா? எனவே இந்தக் கேள்வி எழுவதில் நியாயமில்லை. பாஜக எங்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகச் சொல்லியுள்ளதா? இல்லை நாங்கள்தான் கூறியுள்ளோமா? ஜெயலலிதா இறந்த பிறகு கூட்டணியாக எங்களை பாஜக கருதவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் எங்களிடம் சில உதவியைத்தான் நாடியிருக்கிறார்களே தவிர, கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்லியுள்ளார்களா?

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நட்பு உள்ளது. ஆனால் நட்பின் அடிப்படையில் வைக்கும் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. நீட், நிலுவைத் தொகை, கஜா நிவாரண நிதி என மத்திய பாஜக அரசு தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. தமிழகத்துக்கு நன்மை செய்பவர்களுடன்தான் கூட்டணி என்று முதல்வர் தெரிவித்துள்ளார். பாஜக இதுவரை தமிழகத்துக்கு நன்மை செய்யவில்லை. நன்மை செய்த பிறகு, தலைமைக் கழகம் அது குறித்து முடிவெடுக்கும் என்றார்.

seithichurul

Trending

Exit mobile version