தமிழ்நாடு

அதிமுக-பாஜக கூட்டணியால் மக்களுக்கு லாபம்: தம்பிதுரையின் இது வேற வாய்!

Published

on

மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நீண்ட முயற்சி மேற்கொண்டு ஒருவழியாக கூட்டணியை உறுதி செய்து அதிகாரப்பூர்வை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டாணியில் பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இவ்வளவு நாட்கள் வரை அதிமுக, பாஜக கூட்டணி அமையாது எனவும், பாஜகவை மிகக்கடுமையாகவும் விமர்சித்து வந்த மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை தற்போது இந்த கூட்டணிக்கு ஆதரவாகவும், இந்த கூட்டணியால் மக்களுக்கு லாபம் எனவும் பாராட்டியும் பேசியுள்ளார்.

கரூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, காங்கிரஸ், திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தக் கூட்டணியை எங்கள் தலைமை அமைத்துள்ளது. கூட்டணியால் மக்களுக்குத்தான் லாபம். இது மக்களாட்சிக்காக ஏற்படுத்தபட்ட கூட்டணி என்று தெரிவித்தார்.

முன்னதாக நாங்கள் பாஜகவை தூக்கி சுமக்க மாட்டோம், நிலுவை தொகை, கஜா புயல் உள்ளிட்ட விவகாரங்களில் பாஜக தமிழகத்துக்கு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டிவந்த தம்பிதுரை, தற்போது இந்த கூட்டணியால் மக்களுக்கு லாபம் என தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version