சினிமா செய்திகள்

காலில் விழுந்து கெஞ்சிய தாமரை: ஒன்று கூடும் போட்டியாளர்கள்!

Published

on

அபிஷேக்கின் காலில் விழுந்து தாமரைக் கெஞ்சிய நிலையில் அவரை காப்பாற்ற சக போட்டியாளர்கள் ஒன்றிணைவது குறித்த காட்சிகள் இன்றைய 2-வது புரமோ வீடியோவில் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்ச்யில் இந்த வாரம் அபிஷேக், பாவனி ரெட்டி, அக்சரா, இசைவாணி, சின்னப்பொண்ணு, ஸ்ருதி, ப்ரியங்கா, அபினய், ஐக்கி, தாமரை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பதும் இவர்களின் ஒருவர் இந்த வாரம் ஞாயிறன்று வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய பஞ்சதந்திரம் டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஒருவேளை அவர் நாமினேட் செய்யப்படாதவராக இருந்தால் நாமினேட் செய்யப்பட்ட ஒருவரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இன்றைய டாஸ்க்கில் வெற்றி பெற்றவர்கள் தாமரையை காப்பாற்ற தீவிர முயற்சி செய்வதாக தெரிகிறது. அபிஷேக் காலில் விழுந்து தாமரை கெஞ்சி கதறி அழுத நிலையில் அவரை காப்பாற்றும் போட்டியாளர்கள், அதேநேரத்தில் சின்னப்பொண்ணுவை வெளியேற்றவும் திட்டமிட்டுள்ளதாக இன்றைய 2-வது புரமோவில் இருந்து தெரிய வருகிறது.

இன்று வெளியாகும் அடுத்த புரோமோ மற்றும் இன்றைய நிகழ்ச்சியில் இருந்து பஞ்சதந்திரம் டாஸ்க் உதவியால் தாமரை காப்பாற்றப்படுகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Trending

Exit mobile version