சினிமா செய்திகள்

சாமி சத்தியமா தெரியல சார்: தாமரை செல்வியின் வெள்ளேந்திதனத்தை ரசித்த கமல்!

Published

on

சாமி சத்தியமா எனக்கு தெரியல என வெள்ளந்தியாக பிக்பாஸ் தாமரை செல்வி இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் கூறியதை கமல்ஹாசன் ரசித்த காட்சிகள் உள்ளன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த நிலையில் ஒரு வாரம் இந்த நிகழ்ச்சி கடந்துவிட்டது. இந்த ஒரு வாரத்தில் 18 போட்டியாளர்கள் மிகவும் ஜாலியாக இருந்தனர் என்பதும் திடீரென நேற்று நமீதா மட்டும் ஒரு சில மருத்துவ காரணங்களால் விலகி விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதே தவிர்க்க முடியாத காரணத்தினால் நமிதா விலகிவிட்டதாக பிக் பாஸ் குரல் கேட்டது என்பதும் கமல்ஹாசன் அதனை உறுதி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய முதல் புரோமோ சகோதரி சென்டிமென்ட் குறித்து அபிஷேக் கூறியதை கூறியதை அனைவரும் பார்த்திருப்பார்கள்.

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான இரண்டாவது புரோமோவில் தாமரைச்செல்வி பேசும் காட்சிகள் உள்ளன. போட்டியாளர்கள் அனைவருக்கும் லைக்ஸ், டிஸ்லைக் போடும் நிகழ்வு இன்றைய இரண்டாவது புரமோ காட்சிகளில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இமான் அண்ணாச்சிக்கு தான் லைக்ஸ் போடுவதாகவும், தனக்கு கோபமோ அல்லது மன அழுத்தமோ இருந்தால் அவரிடம் தான் தான் பேசி மன ஆறுதல் அடைவதாகவும் கூறி இமான் அண்ணாச்சிக்கு தாமரை செல்வி கொடுத்தார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்ததே இல்லை என்றும் சிறு வயதில் நான் எப்படி ஆடிப்பாடி விளையாட வேண்டும் என்று நினைத்தேனோ அவை எல்லாமே எனக்கு இந்த வீட்டில் தான் நடக்கின்றது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார். தாமரைச்செல்வி மேலும் சாமி சத்தியமா எனக்கு இதெல்லாம் தெரியாது என வெள்ளேந்தியாக கூறியதை கமல்ஹாசனும் ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version