சினிமா செய்திகள்

தாமரைக்குத்தான் டைட்டில் பட்டம்: அடிச்சு சொல்லும் நெட்டிசன்கள்!

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தாமரை கடந்த ஞாயிறன்று வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவருக்கு டைட்டில் பட்டம் நிச்சயம் என்று நெட்டிசன்கள் திடீரென சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகருமான அந்தோணிதாசன், நடிகர் கருணாஸ் மனைவி கிரேஸ் கருணாஸ், நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா, சார்பாட்டா பரம்பரை உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் மற்றும் நகைச்சுவை நடிகை வித்யுலேகா ஆகியோர்கள் போட்டியாளர்களாக இருக்கும் நிலையில் தற்போது தாமரை புதிதாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தாமரை ஏற்கனவே சமையல் கலையில் வல்லவர் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த தொண்ணூற்று ஐந்து நாட்களிலும் அவர் சிறப்பாக சமையல் செய்தார் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக கலந்து கொண்டால் நிச்சயம் அவருக்கு தான் டைட்டில் வின்னர் பட்டம் கிடைக்கும் என்று நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தாமரைக்கு வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்கவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version