சினிமா செய்திகள்

வெற்றிமாறன் – ராகவா லாரன்ஸ் படத்திற்கு இசையமைப்பாளர் இவரா?

Published

on

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடித்து வரும் ’விடுதலை’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் சூர்யா நடிக்க உள்ள ’வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் என்பதும் அதனை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோக விஜய்க்கு அவர் ஒரு கதை கூறி உள்ளார் என்பதும் விரைவில் விஜய் படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது.

இந்தநிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தின் கதையை வெற்றிமாறன் எழுதி இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த படத்திற்கு ’அதிகாரம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை துரைசந்திரசேகர் இயக்கவிருப்பதாகவும் இந்த படத்தின் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் தமன் என தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடிக்க பிரபல நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் கதையில், ராகவா லாரன்ஸ் நடிப்பில், தமன் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version