சினிமா

ஷங்கரின் புது படத்துக்கு இசை யார் தெரியுமா?.. கேட்டா ஷாக் ஆவிங்க….

Published

on

தமிழ் சினிமாவில் ஜெண்டில்மேன், ஜீன்ஸ், இந்தியன், காதலன், முதல்வன், எந்திரன், அந்நியன் என பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இந்திய சினிமா உலகில் முக்கிய இயக்குனராக இருப்பவர் ஷங்கர்.

 

2019ம் ஆண்டு மீண்டும் கமல்ஹாசன் நடிக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்க ‘இந்தியன் 2’ திரைப்படத்தை அவர் துவங்கினார். 25 சதவீத படப்பிடிப்பு மட்டுமே நடந்தது. அதன்பின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் மரணமடைந்தனர். மேலும், கமல்ஹாசன் பிக்பாஸ் மற்றும் அரசியலில் பிஸி ஆகி விட தற்போதுவரை இந்தியன் 2 துவங்கப்படவில்லை. எனவே, தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டார். மேலும், பாலிவுட்டில் அந்நியன் திரைப்படத்தை ரீமேக் செய்வதாகவும் அறிவித்தார்.

7) ராம்சரண்

எனவே ஷங்கருக்கும், லைக்காவும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்தியன் 2 -வை முடிக்காமல் ஷங்கர் வேறு படங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என லைக்கா நிறுவனம் நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தது. சமீபத்தில் ஷங்கருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. எனவே, ராம்சரன் படத்தை இயக்குவது என ஷங்கர் முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில், தெலுங்கில் அதிக படங்களுக்கு இசையமைக்கும் தமன் இப்படதிற்கு இசையமைக்கவுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version