சினிமா செய்திகள்

தளபதி 66 படத்தை இயக்கும் தளபதி மகன்..?- தயாரிக்கிறதா சன் பிக்சர்ஸ்..?

Published

on

தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தான் தளபதி 66 படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

நடிகர் விஜய் தற்போது தனது 65வது படத்துக்காகத் தயாராகி வருகிறார். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தாமதம் ஆனதால் உடனடியாக தளபதி 66 படத்திலும் நடிக்கக் கதை கேட்கத் தொடங்கினார் விஜய்.

தளபதி 66 படத்தை இயக்க இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லி, விநோத் ஆகியோருக்கு நடுவே போட்டி காணப்படுவதாகக் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகி பரவி வரும் செய்தி பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தை நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தான் இயக்கப் போகிறார் என்னும் செய்தி வைரல் ஆகி வருகிறது. விஜய் மகன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா தொடர்பாகத் தான் ஒரு படிப்பை படித்து வருகிறார். அவர் அமெரிக்காவில் கல்லூரி படிப்புக்காகச் சென்ற போதில் இருந்தே அவ்வப்போது சஞ்சய் இயக்கத்தில் சில குறும்படங்கள் வெளியாகி வைரல் ஆகின. படிப்புக்காக எடுக்கப்படும் குறும்படங்கள் தமிழக ரசிகர்கள் இடையே வைரல் ஆனது.

இந்த சூழலில் சஞ்சய் இயக்குநர் ஆகப் போகிறார் என அப்போது இருந்தே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. தற்போது தளபதி 66 படத்தை ஜேசன் சஞ்சய் இயக்க உள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version