சினிமா செய்திகள்

பிஞ்சு குழந்தையாக ‘தளபதி’ விஜய்; வைரலாகும் புகைப்படம்!

Published

on

தமிழ்த் திரைத் துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ‘தளபதி’ விஜய். கடந்த பொங்கல் பண்டிகையின் போது, அவர் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி பெரும் வசூல் சாதனைப் புரிந்தது.

கொரோனா காலக்கட்டத்தில் துவண்டு கிடந்த தமிழ்த் திரைத் துறையை துளிர வைத்தது ‘மாஸ்டர்’ தான் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை கருத்து தெரிவித்தனர். கொரோனா காலக்கட்டத்தில் தியேட்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும், ‘மாஸ்டர்’ படத்தைப் பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளுக்குப் படையெடுத்தனர்.

தற்போது விஜய், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை ‘விஜய் 65’ என அழைத்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான், இந்தப் படத்தை இயக்குகிறார்.

‘முகமூடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமான பூஜா ஹெக்டே, விஜய்க்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிக்கிறார். தற்போது ஜார்ஜியா நாட்டில் இந்தப் படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் விஜய்யின் பால்யகால நண்பரும் நடிகருமான ஶ்ரீநாத், தன் ட்விட்டர் பக்கத்தில் அவரின் சிறு வயது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version