சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுக்காக ‘அட்ஜெஸ்ட்’ செய்து கொண்ட தளபதி விஜய்..!

Published

on

நடிகர் சிவகார்த்திகேயனின் படத்துக்காக நடிகர் விஜய் தனது ஷூட்டிங் ஷெட்யூலை மாற்றி அமைத்துக் கொண்டுள்ளாராம்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் மார்ச் மாதம் டாக்டர் திரைப்படம் வெளிவர உள்ளது. இதே இயக்குநர் நெல்சன் தான் தளபதி 65 படத்தை இயக்க உள்ளார். நெல்சன் தளபதி 65 படத்துக்கான பணிகளை நெல்சன் இன்னும் தொடங்கவில்லையாம்.

எப்போதும் தளபதி விஜய் தன்னுடைய படம் வெளியானால் அடுத்த ஒரு மாதத்தில் நிச்சயமாக அடுத்த படத்துக்கான படப்பிடிப்பில் நடிக்கத் தொடங்கிவிடுவாராம். ஆனால், நெல்சன் டாக்டர் பட வெளியீட்டுக்காகப் பணி செய்து கொண்டிருப்பதால் அவரால் தளபதி 65 வேலையைத் தொடங்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்காக மாஸ்டர் படம் வெளியாகி 3 மாதங்களுக்கு காத்திருந்து தளபதி 65 படத்துக்கான படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ள உள்ளார். விஜய் சிவகார்த்திகேயனின் படத்துக்காகவும் இயக்குநர் நெல்சனுக்காகவும் தனது வழக்கமான நடைமுறையை மாற்றிக் கொண்டுள்ளாராம்.

seithichurul

Trending

Exit mobile version