சினிமா செய்திகள்

ரோல்ஸ் ராய்ஸ்-க்கான முழு வரிப்பணத்தையும் செலுத்திய தளபதி விஜய்!- எவ்வளவு தெரியுமா?

Published

on

தளபதி விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான முழு நுழைவு வரியையும் நீதிமன்ற உத்தரவின்படி செலுத்தி உள்ளார்.

தளபதி விஜய் கடந்த 2012-ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை லண்டனில் இருந்து இறக்குமதி செய்துள்ளார். இதற்கான அத்தனை சட்டபூர்வ நடைமுறைகளையும் முறையாகக் கடைபிடித்து தேவையான வரிகளையும் கார் வாங்கும் போதே செலுத்தி உள்ளார். ஆனால், சட்டப்படி நுழைவு வரி விலக்கு கேட்டுள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த வந்த இந்த வழக்கில் சமீபமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது நடிகர்கள் வரி கட்டுவதிலிருந்து விலக்கு கேட்பது நன்றாக இல்லை என்றும் சமுகத்துக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதன் பின்னர் விஜய் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதியின் கடுமையான விமர்சனம் ஏற்புடையது அல்ல என்றும் அபராதமாக 1 லட்சம் ரூபாயை கொரோனா நிதியாக தர முடியாது என்றும் ஏற்கெனவே 25 லட்சம் ரூபாய் கொரோனா நிதி ஆக தரப்பட்டுள்ளது என்றும் விஜய் தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து அடுத்த வழக்கு விசாரணையின் போது கேட்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

தற்போதைய சூழலில் விஜய் முன்னதாகக் கட்டியிருந்த 8 லட்சம் ரூபாய் போக மீண்டும் 32 லட்சம் ரூபாயை வரி ஆக செலுத்தி உள்ளார்.

Trending

Exit mobile version