சினிமா செய்திகள்

10 ஆயிரம் கிமீ பைக் ரைட்… வெற்றிகரமாக நிறைவு செய்த ‘தல’ அஜித்..!- வைரல் புகைப்படம்

Published

on

நடிகர் அஜித் சென்னையில் இருந்து தொடங்கிய தனது பைக் பயணத்தில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை முடித்து மீண்டும் சென்னையிலேயே நிறைவு செய்துள்ளார்.

நடிகர் அஜித் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட பின்னர் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் வலிமை படத்துக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படப்பிடிப்பின் இடையே கிடைத்த நேரத்தில் தனது பைக்கை எடுத்துக் கொண்டு ஒரு நீண்ட பயணத்துக்குக் கிளம்பினார்.

சென்னையில் இருந்து ஹைதராபாத் மார்க்கமாக பூனே சென்று அதன் பின்னர் மீண்டும் வாரணாசி, லக்னோ, அயோத்தியா என 10 ஆயிரம் கி.மீ தூரம் பயணித்து தனது பயணத்தைத் தற்போது சென்னையிலேயே நிறைவு செய்துள்ளார். இதுகுறித்தத் தகவல்களை அஜித் உடன் பயணித்த நண்பர் ஒருவர் தனது சமுக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வெளி மாநிலப் பயணம் என்றாலும் அஜித் ஆங்காங்கே ரசிகர்கள் உடன் எடுக்கும் புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தன.

வலிமை படத்தைப் பொறுத்த வரையில் கொரோனா அச்சம் குறைந்த பின்னர் தான் படத்தை வெளியிட வேண்டும் என்பதில் தல அஜித் உறுதியாக இருப்பதாக படக் குழுவினர் கூறி வருகின்றனர்.

Trending

Exit mobile version