சினிமா செய்திகள்

2021 தீபாவளிக்கு ரெடியாகிறதா ‘தளபதி 65’..?

Published

on

நடிகர் விஜய்-ன் 65 வது திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியின் போது திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் தனது 65-வது திரைப்படத்தை நடிக்கிறார் என சமீபத்தில் வெளியான செய்தி இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இத்திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். விஜய் நடித்து திரைக்கு வரக் காத்திருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டுத் தேதியே உறுதி செய்யப்படாத சூழலில் நிச்சயமாக மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து வருகிற தீபாவளிக்கே தளபதி 65 படமும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இயக்குநர் நெல்சனின் மூன்றாவது படமாக தளபதி 65 அமைய உள்ளது. நெல்சனின் 2- வது படமான டாக்டர் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. டாக்டர் திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவானது. தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனக்கு கொடுக்கப்பட்ட இசை அமைக்கும் பணியை தளபதிக்காக தொடங்கிவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

வருகிற பிப்ரவரி 2021 தளபதி 65-க்கான இசை தயாராகிவிடுமாம்.

Trending

Exit mobile version