சினிமா செய்திகள்

#Thalapathy65 படப்பிடிப்பு ஆரம்பமானது- வெளியான விஜய்யின் மாஸ் புகைப்படம்!

Published

on

தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத காரணத்தால் ‘விஜய் 65’ என்று அழைத்து வருகிறார்கள். ‘கோலமாவு கோகிலா’ மூலம் தமிழ்த் திரைக்கு இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், ‘விஜய் 65’ படத்தை இயக்குகிறார். அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கி முடித்துள்ள ‘டாக்டர்’ படம் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு சில வாரங்களில் டாக்டர் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலில் கலந்து கொள்ள விஜய், சில நாட்களுக்கு முன்னர் ஜார்ஜியா சென்றார். அங்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version