சினிமா செய்திகள்

’பீஸ்ட்’ படத்தின் அடுத்த அப்டேட்: மேலும் 3 நட்சத்திரங்கள் அறிவிப்பு!

Published

on

தளபதி விஜய் நடிக்கும் ’பீஸ்ட்’ படம் குறித்த இரண்டு அப்டேட்களை அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில் தற்போது மூன்றாவதாக மேலும் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளது.

இந்த அப்டேட்டில் நடிகர்கள் ஷைன் டாம் சாக்கோ, அபர்ணாதாஸ், அங்குர் அஜித்விகால் ஆகிய மூவரும் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இதில் ஷைன் டாம் சாக்கோ என்பவர் வில்லனாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே செல்வராகவன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக ’பீஸ்ட்’ படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று கூறப்படுவதால் விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அப்டேட்கள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் நெல்சன் திலிப்குமர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக இதில் தில்ராஜ் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாக இருக்கும் தமிழ் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version