சினிமா செய்திகள்
‘பீஸ்ட்’ ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்: விஜய் ரசிகர்கள் குஷி!
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து சென்சார் பணிகளும் முடிந்து விட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவலை உறுதி செய்யும் வகையில் ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி தான் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ளனர்.
#BeastFromApril13@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #Beast pic.twitter.com/htH6dTPX2q
— Sun Pictures (@sunpictures) March 22, 2022