சினிமா செய்திகள்

தளபதி 66 படப்பிடிப்பிற்காக ஐதராபாத் செல்லும் விஜய்: வைரல் வீடியோ

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இப்படத்தை வம்சி என்ற தெலுங்கு இயக்குனர் இயக்க இருப்பதாகவும் இதில் தில்ராஜூ என்ற தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என்பதும், மேலும் முக்கிய கேரக்டர்களில் சரத்குமார் மற்றும் ஷாம் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று முதல் தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இதற்காக நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு விஜய் கிளம்பிச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் என்றும் அதன்பிறகு போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

Trending

Exit mobile version