சினிமா செய்திகள்

’தளபதி 66’ படத்தின் டைட்டில் ஒரே ஒரு எழுத்துதானா?

Published

on

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்திற்கான செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் ஏப்ரல் முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் வம்சி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் வில்லனாக ஒரு பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் ஒரே ஒரு எழுத்து தான் என்றும் அதுவும் ஆங்கில எழுத்து என்றும் தகவல் கசிந்துள்ளது .

அப்படி என்றால் இந்த படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை யூகித்து நீங்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள்.

 

Trending

Exit mobile version