சினிமா செய்திகள்

’தளபதி 66’ படத்தை அட்லி இயக்குகிறாரா? அப்ப ஷாருக்கான் படம் என்ன ஆச்சு?

Published

on

தளபதி விஜய் நடிக்கவுள்ள 65வது படத்தை நெல்சன் இயக்கவிருக்கும் நிலையில் அவருடைய 66வது படத்தை அட்லி இயக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இது குறித்து விஜய் வட்டாரங்களில் விசாரித்தபோது இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் விஜய் நடிப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கிய மெர்சல் திரைப்படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது என்பதால் மீண்டும் இந்த கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.

‘மெர்சல்’ படத்தின் வசூல் நன்றாக இருந்தாலும், அந்த படத்தின் பட்ஜெட் தாறுமாறாக இருந்ததால், தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்றும், இதற்கு முழு காரணம் அட்லி தான் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அட்லியை வைத்து படமெடுக்க ஸ்ரீதேனாண்டாள் கண்டிப்பாக ஒப்புக்கொள்ளாது என்றும் விஜய் வற்புறுத்தினாலும் அதை அந்நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறப்படுகிறது. எனவே தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பது என்பது நடக்கவே நடக்காது என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன

இந்த நிலையில் ஷாருக்கான் படத்தை அட்லி இயக்க இருப்பதாகவும் அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் விஜய் படத்தை அட்லீ இயக்குவது சாத்தியமே இல்லை என்றும் தெரிகிறது.

அட்லி இயக்கிய ‘பிகில்’ திரைப்படமும் நல்ல வசூலை தந்தாலும் அதிகப்படியான பட்ஜெட் காரணமாக அந்த படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை தரவில்லை என்று டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே அட்லியை வைத்து இனிமேல் படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வருவது கடினமே என்று கூறப்பட்டு வருகிறது

Trending

Exit mobile version