சினிமா செய்திகள்
‘தளபதி 65’ ஜார்ஜியா படப்பிடிப்பு முடிந்தது: சென்னை திரும்பும் விஜய்!
நடிகர் விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஜார்ஜியா நாட்டில் நடைபெற்றது என்பதும் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது ஜார்ஜியா நாட்டில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் இதனையடுத்து இன்று ’தளபதி 65’ படக்குழுவினர் சென்னை திரும்புவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே டூயட் பாடல் மற்றும் ஆக்சன் காட்சிகள் உள்பட பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்தின் 30 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இன்று ஜார்ஜியாவில் இருந்து கிளம்பும் படக்குழுவினர் நாளை அல்லது நாளை மறுநாள் சென்னை திரும்புவார் என்றும் அதன் பின் மே மாதம் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் லாக்டவுன் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.