சினிமா

தளபதி 63: செட் அமைக்கும் பணிகள் ஆரம்பமானது!

Published

on

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் – அட்லி கூட்டணியில் ஹாட்ரிக் படமாக உருவாகிறது தளபதி 63. கல்பாத்தி எஸ். அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் வில்லு படத்திற்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மெர்சல், சர்கார் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

அதேபோல் சிம்டாங்காரன் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார். மெர்சல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்தப் படம் 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது படத்துக்கான செட் அமைக்கும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அதற்காக சென்னை மீனம்பாக்கத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி பூஜையுடன் தொடங்கியுள்ளது. அதற்கான புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. படத்தின் படப்பிடிப்பை ஜனவரி மாதத்தில் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version