சினிமா செய்திகள்

எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவி’ படக்குழு வெளியிட்ட மாஸ் வீடியோ

Published

on

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்த நாள் இன்று. தமிழக அரசியலில் தன் மறைவிற்குப் பின்னரும் தொடர்ச்சியாக தாக்கம் செலுத்தி வரும் நபர் எம்.ஜி.ஆர். இன்றும் அவர் தொடங்கிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகி வரும் திரைட்டம் ‘தலைவி’. இதில் ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

எம்.ஜி.ஆர் காதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்தை பிரபல இயக்குநர் விஜய் இயக்குகிறார். இன்னும் ஒரு சில மாதங்களில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளிவரும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தலைவி படக்குழு, எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு மாஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ இதோ:

seithichurul

Trending

Exit mobile version