சினிமா செய்திகள்

’தலைவி’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு: என்ன காரணம்?

Published

on

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமி நடித்திருந்த இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தெலுங்கு இந்தி உள்பட ஒரே நாளில் பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் இந்தியாவின் பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ’தலைவி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக தலைவி படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். என்றாலும் விரைவில் இந்த படம் ரிலீசாகும் என்ற நம்பிக்கை அனைவர் மனதிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version