தமிழ்நாடு

அடுத்த லெவலுக்கு சென்ற தல அஜித்: குவியும் வாழ்த்துக்கள்!

Published

on

தல அஜித் மிகச் சிறந்த நடிகர் மட்டுமின்றி பல்வேறு திறமைகள் உள்ளவர் என்பது தெரிந்ததே. கார் ரேஸ், மோட்டார் பைக் ரேஸ், சமையல் கலைஞர், மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில்நுட்ப உதவி என பல்வேறு திறமைகள் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபகாலமாக அவரது விருப்பம் துப்பாக்கி சுடும் போட்டியில் இருந்தது. கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள துப்பாக்கி சுடும் நிலையத்திற்கு சென்று அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் தல அஜித் தற்போது தமிழக அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டார். அதில் அவர் முதலாவதாக இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ரைபிள் கிளப் அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட தல அஜித்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதனை அடுத்து அஜித் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதும், அடுத்தடுத்த சுற்றுகளில் தகுதி பெற்று அஜித், சாம்பியன் பட்டத்தை வெல்வார் எதிர்பார்க்கப்படுவதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version