சினிமா செய்திகள்

கேரவனில் தோனியுடன் தனிமையில் பேசிய விஜய்: வைரல் வீடியோ!

Published

on

தல தோனி அவர்கள் சமீபத்தில் சென்னைக்கு வருகை தந்தார் என்பதும் ஐபிஎல் போட்டியில் அடுத்த மாதம் கலந்து கொள்வதற்காக பயிற்சி எடுப்பதற்காக அவர் வருகை தந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சென்னை வந்த தல தோனி தளபதி விஜய்யை சந்திப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. திடீரென அவர் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று. அவர் விஜய்யை நேரில் சந்தித்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் விஜய் மற்றும் தல தோனி ஆகிய இருவரும் கேரவனில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. விஜய்யிடம் பேசிவிட்டு கேரவனில் இருந்து இறங்கி வரும் தோனி தனது காரை நோக்கி செல்லும் காட்சிகளும் பீஸ்ட் படக்குழுவினருடன் விடைபெறும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது.

மேலும் இந்த வீடியோவில் தல தோனி காரில் ஏறும் வரை அவருடன் வந்த விஜய்,அவரை கைகுலுக்கி வலியுறுத்தி வைத்த காட்சிகளும் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மணி நேரங்களாக விஜய் மற்றும் தோனி சந்திப்பு மற்றும் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தான் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/BeastFilmTeam/status/1425767087134281733

seithichurul

Trending

Exit mobile version