கிரிக்கெட்

இன்று தோனிக்கு ஒரு சிறப்பான மேட்ச்: எப்படி தெரியுமா?

Published

on

தல தோனிக்கு இன்று ஒரு சிறப்பான மேட்ச் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தல தோனி தலைமையேற்று இன்றுடன் அவர் 200வது போட்டியை விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 176 போட்டிகள் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தல தோனி அவர்கள் தனது முதல் போட்டியை பஞ்சாப் அணிக்கு எதிராக தான் விளையாடினார் என்பதும் அதேபோல் தற்போது 200வது போட்டியையும் பஞ்சாப் அணிக்கு எதிராக தான் விளையாடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய 200வது போட்டியில் தல தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று அபாரமாக பந்து வீசி 4விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறது.

தீபக் சஹர் மிக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் ஒரு விக்கெட் ரன் அவுட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தல தோனி அவர்கள் தனது 200-வது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சாதனை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version