சினிமா செய்திகள்

’தல’ பிறந்தநாளில் வெளியாகிறதா ‘வலிமை’- படக்குழுவினர் சூப்பர் அப்டேட்

Published

on

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் வெளியீடு குறித்த முக்கியத் தகவல் படக்குழுவினரிடம் இருந்து கசிந்துள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்பட்ம வலிமை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதலில் ஸ்விட்சர்லாந்து பகுதிகளில் நடத்தப்படுவதாக இருந்ததாம். ஆனால், கொரோனா, ஊரடங்கு எனப் படப்பிடிப்பு தள்ளிப்போனது மட்டுமல்லாமல் இந்த சூழலில் வெளிநாட்டுப் படப்பிடிப்பு சிக்கல் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம் படக்குழுவினர்.

இதனால், டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறதாம். தற்போது ஹைதராபாத் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளதாம் படக்குழு. வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிடும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஏப்ரம் கடைசி வாரம் வலிமை படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது. மே 1 தல பிறந்தநாள் என்பதால் அதற்கு இரண்டு நாட்கள் முன்பு ஏப்ரல் 29-ம் தேதி போல் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version