சினிமா செய்திகள்

ரீ-ரிலீஸ் ஆகிறதா ‘மங்காத்தா’; தல பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் உண்டா?

Published

on

‘தல’ அஜித் நடிப்பில், கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் ‘மங்காத்தா’. வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்துக்கு மிகப் பெரிய ப்ளஸ்ஸாக அமைந்தது. இந்நிலையில் இந்தப் படம் வரும் மே 1 ஆம் தேதி, அதாவது அஜித்தின் 50வது பிறந்த நாளின் போது ரி-ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 

தல அஜித்தின் பில்லா திரைப்படம், சென்ற வாரம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸானது. இது தல ரசிகர்களை பயங்கர குஷிப்படுத்தியது. 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா, அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்பு முனையாக இருந்தது. பல ஃபிளாப் படங்களைக் கொடுத்து வந்த அஜித், பில்லா மூலம் வெற்றிப் பாதைக்குத் திரும்பினார். மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படத்தின் ரீமேக் என்பதாலும், அஜித் ரசிகர்களால் இந்தப் படம் அதிகம் கொண்டாடப்பட்டது. இன்றளவும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அதிகம். பில்லா படம், பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி, நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘மங்காத்தா’ படத்தையும் ரிலீஸ் செய்ய, அந்தப் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ஸ்பெஷல் ரிக்வஸ்ட் ஒன்றை வைத்துள்ளார். 

அவர், படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கு ட்விட்டர் மூலம், ‘தயா அழகிரி சார் தல 50-வது பிறந்தநாளையொட்டி நம்ம தலயின் 50வது படமான மங்காத்தாவை எப்படியாவது ஏப்ரல் 30 ஆம் தேதி ரீ-ரிலீஸ் பண்ணா, ஃபேன்ஸ் நாங்க உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருப்போம். பாத்து செய்ங்க’ என கோரிக்கை வைத்துள்ளார். இதனால் மங்காத்தா மீண்டும் வெள்ளித்திரையில் மின்னும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending

Exit mobile version