சினிமா செய்திகள்

’தல’ அஜித்-ன் ‘வலிமை’ படப்பிடிப்பு நிறைவடைகிறது…- ட்ரெண்ட் ஆன அப்டேட்!

Published

on

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது என தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தல அஜித் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் வலிமை. இயக்குநர் விநோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்வதிலேயே தாமதம் ஏற்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக தல ரசிகர்களும் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டுக்கொண்டே வேறு இருந்தனர்.

முன்னர் வெளியான செய்தியின் அடிப்படையில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்துக்கான அப்டேட்டை வழங்கி இருந்தார். அதாவது வலிமை படத்தில் இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்க உள்ளதாம். அதோடு வலிமை படத்துக்கான படப்பிடிப்பு நிறைவு பெறும் எனத் தெரிவித்திருந்தார். ஆகையால் வலிமை படம் வருகிற பிப்ரவரி 15-ம் தேதி நிறைவு செய்யப்படுகிறது.

இந்த செய்தியை தற்போது ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர் தல ரசிகர்கள். ட்விட்டரில் #ValimaiWrapOnFeb15 என்னும் ஹேஷ்டேக் ட்ரென்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version