சினிமா செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் பார்டரில் தல அஜித்: வைரல் புகைப்படங்கள்!

Published

on

இந்தியா-பாகிஸ்தான் பார்டரில் தல அஜித் இருக்கும் புகைப்படங்கள் சற்றுமுன் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித் நடித்து முடித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தல அஜித் கடந்த சில நாட்களாக வட இந்தியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன்னர் தல அஜித் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பார்டரில் இந்திய கொடியை ஏந்தி இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது

மேலும் இந்தியாவின் ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தல அஜித்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version